அடையாளம்
மெத்த படிப்பு
மேல்நிலை பதவி
ஐந்து இலக்க சம்பளம்
ஆடம்பர வாழ்க்கை
கேளிக்கை உல்லாசம்
இவற்றில் இல்லை மதிப்பு
நீ கடந்து செல்கையில்
எதிர்ப்படும் முகங்களில்
மலரும் புன்னகையே
வாழ்ந்த வாழ்க்கையின்
அடையாளம்!

