உன்னத காதலன் படைப்பு

உங்கள் நண்பன் பிரகாஷின்
143ம் படைப்பு.....
பார்ப்பாள்.....!
பார்வையால் என்னை ஈர்ப்பாள்........!
சிரிப்பாள்......!
சிரிப்பில் சிறையும்
பிடிப்பாள்......!
பின்னே சென்றால் மொறைப்பாள்.....!
என் அப்பாவி மனசை எரிப்பாள்......!
திமிராய் என்றும் திரிவாள்.....!
என்னை திட்டியே என்றும் கொள்வாள்......!
அவள் தான் எந்தன் காதலி....!
என்னை ஆட்டி படைக்கும் ஒரு முள்வேலி.....!
(கள்ள விழி அழகு
கடத்தி சென்றது! என்னை.....
வந்தது! தினமும் கனவு
தோன்றியது! அவளின் அழகு.....!
அழகு என்னும் சொல்லை....
அவளை கண்டு அறிந்தேன்.....!
காதல் என்னும் போதையில்
தினமும் நானும் திரிந்தேன்.....!)
(பார்ப்பாள்)
அழகாய் என்றும் இருப்பாள்.....!
என்னை அடிமை ஆக்கி கொள்வாள்.....!
அன்பில் என்னை வெல்வாள்.....!
என் அழகு மனதை பறிப்பாள்.....!
நடையில் உடையில் இடையில்
மயங்கிப்போனேன்......!
அழகில்....
இரவில் கனவில் நினைவில்
மாட்டிக்கொண்டேன்.....!
நிலவில்.....
என் மனதில் வந்தது!
முதல் காதல்....!
சொல்ல சென்றால்!
தினம் மோதல்....!
(காதல் என்னும் கனவு
கண்டேன்! நானும் இரவு....
வானில் தெரியும் நிலவு
மறைத்தது! அவளின் அழகு.....
-இது ஒரு தலைக்காதல் நினைவு.....
காதல் ஒன்றை செய்து
ஆனேன்! நானும் கிறுக்கு.....
கவிதை எழுதி கொடுத்து
இனி பிடிக்கப்போறேன்!நிலவு......
-இது உன்னத காதலன் படைப்பு.......)