வாழ்நாளெல்லாம் உன்னுடனே பயணிப்பேன்
பாடும் கவிதையெல்லாம் பாவை உனக்கடி
நீ பார்க்கும் போது நெஞ்சம் குளிருதடி !
மாலைத் தென்றல் வீசுதடி
மலர்களெல்லாம் என்னுடன் உனக்காக காத்திருக்குதடி !
நான் ஓர் இதயப் பயணி
இரயில் பயணி போல் வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டுவிடாதே
உன் உள்ளத்தில் எனக்கு ஓர் இடம் ஒதுக்கடி
வாழ்நாளெல்லாம் உன்னுடனே பயணிப்பேன்
இது உறுதியடி !
-----கவின் சாரலன்