ஆக்ஸிஜன் கொடு

வாழை மரத்திலும் வழுக்காத என்னை
உன்னை கண்டதும் வழுக்க வைத்துவிட்டாய்!
ஒரேயொரு பார்வை பந்தில் என்னை டக் அவுட் ஆக்கிவிட்டாய்!
ஒரே வார்த்தையில் என்னை முழுவதும் சிதறடித்துவிட்டாய்!
மோக முட்களினால் என்னை குத்திவிட்டாய்!
தேக சாரலிலே என்னை அப்படியே சாய்த்துவிட்டாய்!
பாதச் சுவடுகளிலே என்னை புரளவிட்டாய்!
கை ரேகைகளிலே என்னை இழுத்து மாட்டிவிட்டாய்!
மொத்தத்தில் என்னை கண்டதும் காதலில் மடித்து, காதலின் ஆழ்கடலில் மூழ்கடித்துவிட்டாய்..!!
உள்ளே ஆக்ஸிஜன் இல்லாமல் தவிக்கிறேன்..
ஆக்ஸிஜன் கொடு..

எழுதியவர் : மணிபாலன் (6-Apr-17, 12:18 pm)
சேர்த்தது : செ மணிபாலன்
பார்வை : 86

மேலே