உதடு ஒட்டாத கவிதை இது

உன் தேன் சுவை செவ்விதழ்களை
என் இதழ் கொண்டு தீண்டி கொள்ளவா !
உன் அழகு இதழ் வரிகளில் அழகாய்
கவிதை ஒன்று எழுதி கொள்ளவா !
என் உயிர் காதலை உன் இதழ்வழி
உன் இதயத்துக்குள் சேர்த்து கொள்ளவா !
உன் இதழில் எத்தனை வரிகள் இருக்கிறதோ
அத்தனை கவிதை எழுதுகிறேனே !
ஒரு தடவை உன் உதடுகள் தீண்ட
உன் விழி வழி அசைவால் உத்தரவு கொடு !