பிராண நாதா
பேருந்து பயணம்
சன்னலோர இருக்கை
அருகில் என்னவர்
கருத்தம்மா
நீ இன்னும் தூங்கலையா
தூங்கினேன் சாரே
தண்ணி குடிக்க எழுந்தேன்
காத்து சில்லுனு வீசுது
காலநிலை அருமையா இருக்கு
அப்படியே
வேடிக்கை பாத்துட்டு இருக்கன்
வேடிக்கை பாக்கறயா
பாட்டு கேக்கறயா
இரண்டும் தான்
சரி
எங்க போயிட்ருக்கோம் தெரியுமா?
தெரியுமே ....
எங்க ?
சாலையிலே போயிட்ருக்கோம் .....
ஐ செம காமெடி
நாளைக்கு சிரிக்கறன்.....
ஹா ஹா
நான் இன்னும் எந்த பதாகையும் பாக்கல ......
கொடைக்கானல் ல இருக்கோம்னு மட்டும் தெரியுது
எப்புடி ?
கூகுள் மேப் சொல்லுதே ......
அப்ப இறங்கற இடம் வரப்போது
ஆமாம் என் பிராண நாதா ....
என்னவச்சி காமெடி கீமெடி பண்ணலயே...
ச்சாச்ச .....ஹா ஹா ......
வளைவில் பேருந்து வேகமாக வளைய
எல்லோரும் முன்னாடி இருக்கின்ற இருக்கையில் தலையை இடித்துக்கொண்டோம்
எதிரே வரும் லாரியும் மிக வேகமாக வளைய
இரண்டு வாகனமும் நிலை தடுமாறி கண் சிமிட்டும் நேரத்தில் வேகமாக
ஒரு புறமாக இடித்துக்கொள்கிறது
என்னங்க கண்ணை திறக்காதீங்க
கண்ணாடி கண்ல பட்டுடும்
ம்ம் சரி டி
நீயும் திறக்காத
லாரி என்னை மோதி விட்டு செல்ல (அவர் எதிர்பார்க்கவில்லை லாரி என்னை நசுக்கும் என்று ....ஆனால் முன்பே இருக்கையை விட்டு மாறலாம் என்றார் ...நான் வேண்டாம் நீங்க அதலையே இருங்க ....ஒன்றும் ஆகாது என்று சமாதானப்படுத்தினேன் .....நான் முன்பே அறிந்திருந்தேன் ....லாரி மிகவும் வேகமாக வருகிறது என்று ....)
கூர்மையான கண்ணாடி ஒன்றும்
தெறித்து என் நெஞ்சில் குத்த
நான் உடனே விரைந்து
அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டேன்
நிம்மதி அடையும் வேளை
லூசாக இருந்த ஒரு இரும்பு கம்பி
உருவி கொண்டு
அவரை நோக்கி பாய
நான் அவரை இருக்கையில் இருந்து கீழே தள்ளி விட்டேன்
உடனே சட்டென்று
எதிர் பாராமல் அந்த கம்பி என் இதயத்தில் குத்தி
இருக்கையில் குத்தி மறுமுனை இருக்கைக்கு வெளியே வந்தது
அவர் கீழே விழுந்ததும் கண்விழித்து மேலே இருக்கையை பார்த்தார்
நான் கீழே அவரை பார்த்தேன்
அவர் நன்றாக இருக்கிறார்
நான் அவரை பார்த்து சிரித்தேன்
அவர் எழுந்து என்னை பார்த்து எழுந்திரு எருமை கருத்தம்மா என்று
கண்ணில் ஒரு நீர்த்துளியை துடைத்துக் கொண்டே
என்னை இழுத்து கொண்டிருக்கிறார்
இருக்கையோடு கம்பி இணைந்திருப்பதால் இழுப்பது சாத்தியம் இல்லை என்பதால்
மெதுவாக கம்பியில் இருந்து என்னை உருவி எடுத்து தோளில் போட்டுக்கொள்ள
அவர் விரலோடு என் விரல்களை கோர்த்துக்கொண்டேன்
சாரே இப்ப லோலோனு
எங்க தூக்கிட்டு போறீங்க
எப்படியும் நான் ரொம்ப பாரமா இருப்பன்
உக்காருங்க சார் ....
தூக்கம் வருது
நான் தூங்க போறன் மடியில தாங்குங்க சார் ....
அச்சச்சோ
என்னடி
மொபைல் உள்ளயே இருக்கு
பாட்டு கேக்க முடியாது
நீ தான் பாடணும்
பாடுங்கப்பா பிராண நாதா .....
கருத்தம்மா ,,,,,
கண்ண மூடாத கருத்தம்மா
கொன்னுடுவேன்
பிரபா கையை விட்றாத
கையை இறுக்கமாக பற்றிக்கொண்டேன்
மடியினிலே அவரை பார்த்துக்கொண்டே
மாமா என்கிறேன் .....

