கண்ணில் ஒரு மின்னல்

கடவுள் உன்னை அனுப்பி வைத்தான்
கண்களில் மின்னலை தோன்ற வைத்தான்
என் கற்பனையில்​ உன்னை ஊறவைத்தான்
என்னை கவிதைமழையில் நனைய வைத்தான்

அழகு அனைத்தையும் உன்னில் வைத்தான்
ஆடவர் உலகை ஆட்டி வைத்தான்
மனதில் ஆசையை வளர வைத்தான்
மனதை இன்பத்தில் மூழ்க வைத்தான்

மென்மையும் பெண்மையும் சேர வைத்தான்
மின்னல் போன்ற மேனி படைத்தான்
நங்கையின் மனதில் காதல் வைத்தான்
நாணம் கொண்டே அதைத் தடுத்தான்

காதலில் பிரிவை உணர வைத்தான்
கண்களைத் திறந்தே உறங்க வைத்தான்
கனவினில் மட்டும் சேர வைத்தான்
நனவினில் ஏனோ ஏங்க வைத்தான்?

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (7-Apr-17, 8:22 am)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : kannil oru minnal
பார்வை : 210

மேலே