ஒருபக்க காதல்கதை பாகம் -23

நடந்ததை கூற நச்சரித்து..கூறியதை கேட்டபின் :
அவனின் நண்பன் : ரொம்ப திமிர்தான் டா அவளுக்கு..நீ இவ்ளோ இறங்கி போயும் அவ இணங்க மாட்டேங்கிறால தேவையே இல்ல..உனக்கென்ன டா அவள மாதிரி ஆயிரம் பேரு கிடப்பாங்க
அவன்: திமிர், இணங்குதல் இதெல்லாம் எப்படி முடிவு பண்ற?..ஒரு பொண்ணோட குணாதிசயத்தை அவ ஆம்பள கூட எப்படி பழகுறாங்கிறத வெச்சுதான் முடிவு பண்ணுவியா ..சில பசங்க கிட்ட சரியா பேசலைனா திமிர், பேசுனா வாயாடி, எல்லாமே பசங்க தான் இல்ல?..அதென்ன இணங்குறது..சில கற்புகள் வார்த்தையாலேயே அழிக்கப்படும்ங்கிறது உண்மைதான்
அவனின் நண்பன் : உன்னவெச்சு நல்லா கேம் விளையாடிட்டு இருக்கா ..நீயும் எல்லாத்துக்கும் ஆமான் சாமி போட்டுட்டு இருக்க..அது ஏன்டா என்கிட்ட பேசத்தெரிஞ்ச வக்கிரம், செக்ஸ் இதெல்லாம் அங்க போனா அடங்கி போயிடுது ஒரே முகமா இருக்க முடியலல..எல்லாருக்கும் 2,3 முகமூடி தேவைப்படுது?..
அவன்: முகமூடிகள் தேவைதான்..ஆனா அவை நெருங்க நெருங்க கிழிக்கப்படும்
அவனின் நண்பன்: உண்மைய சொல்லு..அவளை பார்த்தா உனக்கு உணர்ச்சி எழும்பல?...சும்மா தெய்வீக காதல் கற்பூர காதல்னு அளக்காத
அவன்: அவளை பார்த்தா மட்டும் இல்ல, உணர்ச்சி எழும்புறதுக்காக அதை பூர்த்திசெய்ய கருவியா பயன்படுத்தும் அளவுக்கு மிருகமில்ல
அவனின் நண்பன்: ஏன்டா இப்படி நடிக்கிற?
அவன்: எல்லா மனிதனும் கெட்டவன் தான், மிருகம் தான்..தப்புனு தோணுறதும், நீ சொல்ற உணர்வை கட்டுப்படுத்தின மாதிரி நடிப்பதும் தான் ஒருத்தன நல்லவனா, மனிதனாவே ஆக்குது
அவனின் நண்பன்: என்னால கட்டுப்படுத்த முடியாது..நீ வேணும்னா புத்தராவோ, போதிதர்மராவோ இருந்துக்க ..நமக்கு இந்த வேஷதாரி வாழ்கைலாம் சரிப்பட்டு வராது, ஆமாம் நீ யாருக்காக இந்த நல்லவன் வேஷம் போடுற..இந்த ஊரும் உலகமும் உன்ன போற்றனும், உன் புகழ் பாடணும், பொண்ணுங்க எல்லாம் "அவன் ரொம்ப நல்லவன்டி "இன்னு சொல்லணும்னு தான..இதையே கட்டிக்கிட்டு தொங்குங்க டா..இதெல்லாம் பழசு தம்பி..இது கலிகாலம் இல்ல சித்தார்த் அபிமன்யூ காலம்
அவன்: இதுக்கு பேர் நடிப்பு இல்ல யோக்கியம்
எனக்கூறி அவளைப்போல் சிறு புன்னகை தவழ்ந்து திரும்பிவந்தான்..புன்னகையில் பாதி அவளைப்போலவே இருந்தது