வாலியின் வியூகம்

ஒருமுறை யதார்த்த மாய் இப்பாடல் கேட்கும் போது கவனித்தது வாலி சார் இதில் அமைத்த வியூகம் .. நெருப்பு வாயினில் என்று புதுப்பேட்டை படத்தில் நா.முத்துகுமார் எழுதி யுவன் இசையமைத்து கமலஹாசன் பாடிய பாடலில்
" காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும் காத்திருக்காதே கல்லடி கிடைக்கும் " என்ற வரிவரும் அதன் அரத்தம் பாருங்களேன் ... காற்றில் விழும்வரை பொறுக்காதே கல்லடித்தால் கிடைக்கும் என்றும் காற்றில் விழும்வரை காத்திருந்தால் யாரோ வீசிய கல்லடி கிடைக்கும் என்றும் பொருள்படும்..=
இதை ரசித்த கமலஹாசன் தனக்கான நேரம் வரை காத்திருந்து வாலிசாரிடம் கேட்டிருக்கிறார் ஆகவே இப்பாடலின் ஒவ்வொரு இரண்டு வரியும் இருவேறு அர்த்தம் வரும்









கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
கல்லை மட்டும் கண்டால் கல் அல்லது கலை தெரியுமே தவிர கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல் வாங்கிய அடி தெரியாது பாடலில் கமல் கல்லடி வாங்குவதால் கல்லடி தெரியாது என்று அர்த்படும்
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அக்ஷரம் பார்க்காது
எட்டில் ஐந்து போக மூன்று வரும் என்றாலும் ஐந்தில் எப்படி எட்டு கழியாமல் போகும் என்பது ஒன்று . நமோ நாராயணா எட்டெழுத்து நமசிவாய ஐந்தெழுத்து எட்டில் ஐந்து போக எட்டில் நாராணா என்ற மூன்று எழுத்து மீதமாகும். ஆனால் ஐந்தில் எட்டு கழியாது என்பதும் ஒன்று..
அஷ்ட அக்ஷரம் ஏற்றவர் பஞ்ச அக்ஷரம் பார்க்கமாட்டார் தலைகணத்தால் ஒன்று தவறெனறு பார்க்க மாட்டார் இரண்டு


ஊன கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞான கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்


பூத கண்ணால் என்று கேட்டிருப்பீர்கள் ஞான த்திற்கு எதுகை மோனை இல்லாமல் எழுதுவாரா வாலி சார்? குறைதேடும் கண்ணில் பார்த்தால் அனைத்தும் குற்றம் தான் அறிவுடன் பார்த்தால் யாரும் சுற்றம் தான் அதாவது சிவனும் விஷணுவும் உறவினர்தான் சம்மந்திகள் அல்லது மாமன் மச்சான்கள் .. அதேபோல் அறிவுடன் பார்த்தால் சைவர்களும் வைணவர்களும் உறவினர்கள் தான்


இல்லை என்று சொன்ன பின்பும்
இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது

பலரும் கேட்கும் போது எங்கள் என்று கேட்டிருப்போம் எனக்கு நீண்ட நேர தர்க்கமும் அதுவே பொதுவியலா சொல்லிவிட்டு தில்லை எங்கள் என்பது வைணவமா? சைவமா?

பின் தான் அறிந்தேன் தில்லை என்பது திருப்பதியையும் சிதம்பரத்தையும் குறிக்கும் மேலும் பாடலில் எங்கண் எனறிருக்கும்

இல்லை என்று சொன்ன பின்பும்
இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது


வீர சைவர்கள் முன்னால் எங்கள்
தீர வைணவம் தோற்காது
சைவர்களின் வீரத்திற்கு முன்னால் எங்கள் தீரம் தோற்காது என்று ஒன்றும் படத்தின் படி சைவ வீரர்கள் முன்னால் எங்கள் வைணவ தீரம் தோற்காது என்று வரும்
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
மேற்கில் சூரியன் உதிக்காது
மன்னன் ஆணைக்கு இயற்கை அடங்காது என்ற தத்துவமும் படத்தின் படி மன்னன் சொன்னதற்கெல்லாம் பக்தி மாறாது என்றும் சொல்கிறார்


ராஜ லட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேவிக்கும் விஷ்ணுதாசன் நான்
பல்வேறு இடங்களில் பலரது வாழ்வினை குறிப்பிட்டவர் இங்கே தான் ஒரு விஷ்ணுதாசன் என்று தன்னை சொல்கிறார் கதாநாயகனையும் சொல்கிறார்

நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
நாட்டில் பல மன்னர்கள் உண்டு அவர்கெல்லாம் ராஜன் இந்த கடவுள் என்றதோடு அச்சமயத்தில் தன்னை விமர்சித்த ராஜனுக்கும் ராஜன் நான் என்று அவரையே தனது இயற்பெயரான ரங்கராஜனை சொல்லிக்கொள்கிறார்..


நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி
சாகாது
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி
சாகாது
நீருக்குள் மூழ்கினாலும் வைணவம் சாகாது ( படத்தில் கதாநாயகனை நீருக்குள் மூழ்கடிப்பதால்) நீதி சாகாது என்று தத்துவம்... நெஞ்சுக்குள் வாழும் எங்கள் பக்தியின் ஜோதி சாகாது / உண்மையின் ஜோதி சாகாது=..


வீசும் காற்று வந்து விளைக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான் மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா

உவமைக்காய் சொன்ன தத்துவங்கள் கதாநாயகனை அழிக்கலாம் கடவுளை அழிக்கமுடியுமா? என்ற கேள்வியும் வைத்துள்ளார்

சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
சைவம் என்று பார்த்தால் விஷ்ணு என்ற தெய்வம் தெரியாது / சைவம் என்று பார்த்தால் எந்த கடவுளும் தெரியாது அனைவரும் வதம் செய்தவர்களே
தெய்வம் என்று பார்த்தால் சைவ வைணவ சமயம் தெரியாது / தெய்வம் என்று பார்த்தால் காலை மாலை போன்ற சமயங்கள் கிடையாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

எழுதியவர் : பவித்ரன் கலைச்செல்வன் (7-Apr-17, 8:12 pm)
Tanglish : vaaliyin viyuukam
பார்வை : 152

மேலே