எங்கு நீ சென்றாயோ

கிளியை தூதுவிட்டேன்
சேதி ஒன்றும் அறியாது
திரும்பியது என்னிடம்
எங்கு நீ சென்றாய் என் மன்னவா
ஏங்குகிறேன் நான் கண்ணவா
கண்களை மீன் என்றாய்
மீன் முட்கள் குத்துதடா
கருநாகக் குழல் என்றாய்
கருநாகம் சீண்டுதடா
என்னுடலில் மணம் என்றாய்
காய்ந்த சருகாக
கிடக்குதடா
உன் கன்னியுடல் நிலத்தில்
புரிந்து கொள்
அழைத்துவிடு
உன் இருப்பிடம்
அதுவரைக்கும் இதுதான்
என் இருப்பிடம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (8-Apr-17, 12:52 pm)
Tanglish : engu nee sendraayo
பார்வை : 371

மேலே