கதைக்குள் ஒரு காதல்
பொழுது விடிந்தது கூட தெரியாமல் உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த மகளை பார்த்த படி நின்று கொண்டிருந்தாள் லதா.தூக்கத்தில் இருக்கும் மகள் சிறு குழந்தையாய் தெரிந்தாலும் அவளும் திருமண வயதை அடைந்தவள் என்பது அவ்வப்போது தாயின் மனதை தீண்டும்,யோசனையில்
ஆழ்ந்த தாயை பார்த்து என்னம்மா என்ன யோசனை என்று கேட்டவாறு படுக்கையில் இருந்து எழுந்தாள் விஜி..உன்னை பற்றி யோசனை தான் என்று சொல்ல மனம் வரவில்லை.ஒன்றும் இல்லை என்று கூறிய படி சமையலறை நோக்கி நடந்தால் லதா.தன்னை பற்றி தான், தாய் யோசனையும் கனவுமாய் இருந்தால் என்ன என்பதை அறியாதவள் அல்ல விஜி.தன் நிலைமை வழக்கத்திற்கு மாறாக புதிதாக ஏதும் நடக்கவில்லை எப்பொழுதும்
நடப்பது தான்.இதை பற்றி கேட்டு தாயின் வேதனையை அதிக படுத்த விரும்பாத மகள்..தன்னை பற்றி யோசிக்கும் போது அவளுக்குள் ஒரு படபடப்பு ஒரு வெறுமை.இவ்வாறு படுக்கையில் இருந்தவாறு யோசித்தால் வேலைக்கு எப்போது கிளம்புவது என்று யாரோ
அவளுள் கேள்வி ஒன்றை எழுப்ப யோசனையில் ஆழ்ந்து இருந்தவள் அவசரமாய் எழுந்தாள்.. (தொடரும்)