பாயலும் காயலும்

ஏன்டியம்மா செல்லப் பேத்தி, உனக்கு உங்கப்பன் என்னடி 'பாயல்'ன்னு பேரு வச்சிருக்கறான். சொல்லுடி பாயலே.
😊😊😊😊😊😊
எம் பேரச் சரியாச் சொல்லீட்டங்க பாட்டிம்மா. பாயல். பாயல்.. பாயல். போதுமா? தமிழ்நாடு புதுச்சேரி தமிழ் மண்ணில வாழற தமிழர்களே பிள்ளைங்களுக்கு தமிழ்ப் பேருங்கள வைக்காம இந்திப் பேருங்கள வைக்கிறாங்க. பீகார்ல ஐஏஎஸ் அதிகாரிய இருக்கற எங்கப்பா எனக்கு 'சிலம்புச் செல்வி' -ன்னுதான் பேரு வைக்க ஆசைப்பட்டாரு. அந்த இந்திக்காரங்க எம் பேரத் தப்புத் தப்பா உச்சரிப்பாங்க. அதுக்காகவேண்டி. எம் பேர 'பாயல் என்கிற காயல்' - ன்னு பதிவு பண்ணிட்டாருங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊😊😊
உனக்கு 'சிலம்புச் செல்வி' -ன்னே பேரு வச்சிருக்கலாமே? அருமையான பேரு.
😊😊😢😢😢😢
பெரிய படிப்பு படிச்ச எங்கம்மாவே ஜெயலலிதா ரசிகை. அவுங்க கண்ணகி சிலையை தூக்கி அருங்காட்சியகத்தில மூடி வச்சிருந்தாங்க.அப்பறம் திமுக ஆட்சி வந்த பிறகுதான் பழைய எடத்திலேயே கண்ணகி சிலையை வச்சாங்க. அந்த அமமா சோதிடத்தில தீவிர நம்பிக்கை உள்ளவங்க. அவுங்க மேடைக்குப் பேரு வைக்கச் சொல்லி கொண்டு வர்ற
குழந்தைங்களுகல்லாம் இந்திப் பேருநங்களத்தான் அவுங்க சூட்டுவாங்க.
அவுங்களோட ரசிகையான எங்க அம்மாவும் எனக்கு 'பாயல்' - ன்னு பேரு வச்சாங்க. அப்பாதான் 'பாயல் என்கிற காயல்' -ன்னு பேரு வச்சுடாங்க.
😊😊😊😊😊😊
அதெல்லாம் சரி. அந்தப் பாயலுக்கும் காயலுக்கும் என்னடி அர்த்தம்?
😊😊😊😊😊😊😊
அதத்தான் மொதல்லயே சொன்னனே. 'பாயல்' -ன்னா 'சிலம்பு' -ன்னு அர்த்தம் பாட்டிம்மா. (Anklet). காயல் -ங்கறது தமிழ்ச் சொல். அதுக்கு அருவி -ன்னு அர்த்தம் பாட்டிம்மா

எழுதியவர் : மலர் (9-Apr-17, 2:57 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 254

மேலே