ரோஜாவின் உபதேசம்
முத்துக்களாக
சிதறிக் கிடக்கின்றன
பனித்துளிகள்
ரோஜா
உன்னிதழ்களில் !
முட்கள் வனமாக
சூழ்ந்திருக்கிறது
உன் மேனியில் !
இனிமைக்கும்
இந்தக் கொடுமைக்கும்
இடையில் இயல்பாய் வாழ்ந்திட
எந்த ஞானியிடம்
உபதேசம் பெற்றாய் நீ !
----கவின் சாரலன்