கனவு

தென்றல் மெல்ல உரச
யாருமற்ற நீண்ட சாலையில்
நான் நடக்கையில்
குருவிகளின் சத்தம்
மனதை மெல்ல வருட
கைகோர்த்த மனித சங்கிலியாய்
இருபுறமும் மரங்கள் அணிவகுக்க
அன்னார்ந்து பார்க்கையில்
மேகங்கள் ஒளிந்து விளையாட
நான் இறங்கவேண்டிய பேருந்து நிறுத்தம் வரவே
சட்டென விழித்தேன்
இறங்கி நடந்தேன்
என் கனவின் மறு துருவத்தில்.

எழுதியவர் : ரேவதி மணி (10-Apr-17, 10:17 am)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : kanavu
பார்வை : 96

மேலே