சின்ன சின்ன ஆசை
நிலவில் ஓவியம் வரைய ஆசை
சூரியனை உருட்டி விளையாட ஆசை!
பூமியை எடுத்து உள்ளங்கையில் வைக்க ஆசை !
வானவில்லின் வண்ணங்களை அள்ளி வீட்டின் சுவற்றில் தெளிக்க ஆசை!
இரவின் வண்ணத்தை எடுத்து கண் மையாக பூசிக்கொள்ள ஆசை!
மலை துளியினை ஒன்றாக கோர்த்து அணிகலன்களாக அணிய ஆசை!
கடலின் மொத்த நுரையும் எடுத்து ஒரே பானையில் நிரப்ப ஆசை!
மேகங்களை ஒன்று சேர்த்து மெத்தை அமைத்து அதில் உறங்க ஆசை!
வானத்தை ஆடையாக அணிய ஆசை!
மின்னலை எடுத்து ஊசி துவாரத்தில் கோர்க்க ஆசை!
நட்சத்திரத்தை எடுத்து நெற்றியில் பொட்டு இட ஆசை!
கண் சிமிட்டும் அந்த நொடியில் உலகை சுற்றி வர ஆசை!
இந்த மொத்த ஆசையையும் ஒரு வார்த்தையில் சொல்ல ஆசை!!!
**ஆசையே ஆசையாக**
---ரஞ்சு---