அழைப்பிதழ்
வயிறு நிறைய உணவு
தொண்டை நனைய நீர்
கண்களை கொஞ்சிட தூக்கம்
கை கொடுத்திட உறவுகள்
கால் விரும்பிய பாதை
மனம் நிறைய மகிழ்சி
வாய் நிறைய சிரிப்பு
காதை தழுவிட ஓசை
உயிரை ஏந்திட மூச்சு
சொர்க்க பூமியில்
அமைதி தருவாயோ
"இனிய புத்தாண்டே"
தாழ்மையோடு அழைத்திடுது
உயிர்கள் அன்புடன்.....