அன்பே நீ என்றும் எனக்கு அழகுதான்

அழகென்றால் திமிராய் தானிருக்கும்...
ஆனால், அந்த திமிரால் தானே அழகு தானாய் அழியும்...
என்றே எனக்கு உணர்த்திய அழகே,
என்றும் நீ தான் எனக்கு அழகு...

அழகே நீ என்ன நிறமென்று கூறாயோ?
காற்றே நீ என்ன நிறமென்று கூறாயோ??
நீரே நீ என்ன நிறமென்று கூறாயோ???..
நிறத்தில் அழகில்லை என்றே உணர்த்தும் அழகே நீ என்றும் அழகுதான்...
சுவாசக்காற்றே நீ என்றும் அழகுதான்...
தாகம் தீர்க்கும் நீரே நீ என்றும் அழகுதான்...

புல்வெளியானாலும்,
முள் நிறைந்த மண் தரையானாலும் நிலமே நீ என்றும் அழகுதான்...
நிலவே நீ தேய்தலும் வளர்தலும் என்றும் அழகுதான்...
நீலவானமே நீ காட்டுவது என்னவோ மாயத் தோற்றம் தான்...
உன்னை நெருங்கையில் யாவும் தோன்றும் கருமை நிறமாய் தான்....
என்றும் கருமைவானமே நீ எனக்கு அழகு தான்....

குயிலே நீ பாடு...
மயிலே நீ ஆடு...
உலகமே என்றும் அழகுதானென்று குயிலே நீயும் சிந்து பாடு....
இயற்கை அழகை இன்னும் அழகாக்கிட மயிலே நீயும் உன் தோகை விரித்தே பரதநாட்டியம் ஆடு....
இந்த பொய்மை கலந்த மனிதர்களில்லா உலகமே என்றும் நீ அழகு தான்...

மரங்கள், செடிகள், கொடிகளென இயற்கையாவுமே என்றும் அழகுதான், இந்த திமிருடைய அன்பிலா மனித பதர்களைத் தவிர...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Apr-17, 8:36 am)
பார்வை : 3105

மேலே