இயற்கையின் பிழை

இயற்கையின் பிழை

கோளபந்தொன்று
நுரை துப்ப நீர்தளும்பியது
கிளைவிரித்தது மரங்களாய்
காற்று வெளியென கவழ்ந்திருந்தது
கான்கிரிட் இல்லா
பறவை கூட்டில்
பசியறியாதிருந்தன குஞ்சுகள்
புகை கழிப்பில்லா இயக்கங்களில்
கசடுகளற்றிருந்தது காற்றின் சுவாசம்
மழை நீரை நிறம் சேர்க்காமல்
வடித்தன மலர்கள்
இரைச்சல்களில்லா
இயற்கையின் மொழியை
கேட்டது மரத்தில்
ஏறிய அணில்
நீரோடையில் முகம் பார்த்தது
நிலம்
"காண்அகம்" என
மலர்ந்திருந்தது பூமி
இயற்கையின் பிழை
மனிதன்.

நிலாரவி.


திண்ணை மின்னிதழில்
வெளியான என் கவிதை.
(நன்றி திண்ணை மின்னிதழ்.)

எழுதியவர் : நிலாரவி (8-Apr-17, 4:55 pm)
Tanglish : iyarkaiyin pizhai
பார்வை : 164

மேலே