யாருக்கும் வெட்கமில்லை
அரை நிர்வாணம்
இன்று
முழு நிர்வாணமாய்
இத்தனை வருட அரசியல்
தந்த
மிகப்பெரிய பரிசு
இடை தேர்தலில்
பிரச்சார பிசியில்
எம் முதல்வர்
ஒரு சிலையை திறக்கவும்
தனி விமானம்
பக்கத்தில் போராடும் விவசாயிகள் மட்டும்
கண்ணிற்கு தெரியவில்லை
எம் பாரத பிரதமருக்கு
எங்கே போகிறது
நம் தேசமும் மாநிலமும்
அனைத்தையும் சகித்து கொண்டே
நாமும்
இங்கே யாருக்கும்
வெட்கமில்லை
எது நடந்தாலும்
நமக்கென்ன என்று
கடந்து செல்வதே
வழக்கமானது