பெண்மையின் காதல் கலை

பருவ வயதிலே ஆசைகள் பூத்தால்
காதல் என்றே பேராகும்
காதலி உந்தன் சம்மதம் கிடைத்தால்
காதலன் உள்ளம் ஆறாகும்
இந்தக்​ காதலன் உள்ளம் ஆறாகும்

கன்னி அழகை பாட நினைத்தால்
கற்பனை அழகு கவியாகும்
முக்கனி சுவையும் முழுவதும் கொடுக்கும்
காதலி கன்னம் கனியாகும்
இந்தக் காதலி கன்னம் கனியாகும்

ஆண்களைக் காதலில் விழ வைப்பது
கண்களின் காதல் வலையாகும்
பார்வை ஒன்றால் மயங்க வைப்பது
பெண்மையின் காதல் கலையாகும்
இந்தப் பெண்மையின் காதல் கலையாகும்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (10-Apr-17, 9:35 pm)
பார்வை : 993

மேலே