அன்பைத் துறந்தால் அரக்கனாவீர்

விளையாட்டாய் சிறு தவறிழைத்த குழந்தையைத் தண்டிக்க எண்ணிய தாய், ஓங்கி அறைந்தாள் கன்னத்திலே...
பூப் போன்றிருந்த அந்த மழலையின் கன்னம் சிவந்துவிட்டது, உழைத்தே காய்த்த அந்தத் தாயின் கை வேகமாய் மழலையின் கன்னத்தில் மோதியதாலே...

" அம்மா அடிக்காதே. ", என்று கூறிக் கொண்டே தரையில் விழுந்து அழுதது கண்ணீர் கடலே போங்கி கரைபுரண்டோட....

அடித்த தாயின் மேல் கோபம் வர, ஒடி சென்றே அழுதக் குழந்தையைக் கையில் தூக்கியபடி, " ஏன் அக்கா இப்படி சின்னக் குழந்தையை அடிக்கிறீங்க? ", என்றே கேட்க, " அது எனது குழந்தை. நான் அடிப்பேன். உதைப்பேன். கொல்லக்கூட செய்வேன். ", என்றே கோபமாய் குழந்தையை என் கையிலிருந்து வாங்கிக் கொண்டு செல்ல, கோபத்தின் கோரத்தைக் கண்டேன் தாய்மையும் அரக்கியாகியதாலே....

தான் சிறு பிள்ளையாய் இருக்கையில் தான் செய்த தவறையே, தன் குழந்தையும் செய்கிறது என்றே மனமறிந்தாலும் குழந்தையின் கோபமாகி அடிக்கிறோமே, அது தவறில்லையா??.

அன்பால் வளர்க்கப்பட வேண்டிய குழந்தையை அடித்து துன்புறுத்து அதிகாரத்தால் அடக்கி, வளர்த்தால், குழந்தை காலமெல்லாம் அடிமையாகத் தானே வாழும்...

அன்பால் சிந்தனை தூண்டி நற்பண்பை வளர்ப்போம் குழந்தைகளின் மனதிலே.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Apr-17, 10:55 pm)
பார்வை : 653

மேலே