ஹைக்கூ முயற்சி 6

நானும் பிள்ளையார் ரகம்தான்
மகனைத் தூக்கினேன்
உலகைத் தூக்கச்சொன்னதற்கு...!

காற்றிலலைக்கிறது கட்சிக்கொடிகள்
கட்சித்தாவும் விதிமுறைக்கு
காற்றும் விதிவிலக்கல்ல...!'

பூமியைப் புணரும் மழை
பிரிக்கும் பாவிகளாய்
மானிடரும் ஆதவனும்...!

விதையையும் துகிலுரிக்கிறார்கள்
விதைப்பவனையும் துகிலுரிக்கிறார்கள்
நவீன துச்சாதனர்கள்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (13-Apr-17, 10:28 pm)
பார்வை : 424

மேலே