நியாயத் தராசு

தேசம் அடிமைப்பட்டதால்
காந்தி நேரு இன்னும்
பலரின் தியாகமும்
திறமையும் அனைவருக்கும்
தெரிய வந்தது...
ஒருவேளை ஆங்கிலேயன்
அடி எடுத்து வைக்காவிடில்
காந்தி நேருவே நமக்குத்
தெரிந்திருக்காது...

திறமைகள் தெரிந்திட
பிரச்சனைகள்
தேவை போலும்...

நண்பன் ஜெயதாஸ்...
இவனது வாதங்கள்
பிரச்சனைகள்
அடிப்படையிலானது...

பிரச்சனைகள்
விரும்பப் படாதவை...
நண்பனே! ஜெயதாஸே!!
பிரச்சனைகளையும்
விரும்பாமலேயே
வரவேற்கிறோம்...
நண்பன் ஜெயதாஸின்
அருமையான திறமைகளையும்
அவனது அற்புத தீர்வுகளையும்
அறிவதற்கு...

மின்வாரியப்
பொறியாளனே!
நன்னெறியாளனே!!
நியாயத்துக்கு கேடு
வரும்போதெல்லாம்
நீ கொடுக்கும் அதிர்ச்சி
மின் அதிர்ச்சியையும் விட
வலியது...
உன் வாழ்வு என்றும்
மின்னொளியையும்
மிஞ்சி பிரகாசிக்கட்டும்...

நேர்மை பாராட்டும் நீ
நட்பையும் பாராட்டும்
உன் இயல்பு மின்வாரிய
டிரான்ஸ்பார்மர்களையும்
விட சக்தி வாய்ந்தது
அன்பெனும் கன்ட்ரோல் ரூம்
உனக்கு நன்றாகச்
செயல்படுவதால்...

நேர்மையற்ற வழிகளில்
வரும் சொத்துக்களை விட
உன் நேர்மையே
உனக்கு மிகப்பெரிய
சொத்து...
அதனை வங்கிகளில்
இட்டுவைக்க
முடியாதெனினும்...
அச்சொத்து அள்ள அள்ளக்
குறையாதது...
பிறருக்கு பரிமாற்ற
உயில்களும்...
பத்திரப் பதிவுகளும்
தேவையே இல்லை...

வரலாற்றில் இடம்
பிடிக்க என்றில்லாமல்
உன்னை உனக்குப்
பிடிக்க நீ வாழ்வதால்
ஜெயதாஸே உன்னை
எனக்கு மிகவும்
பிடிக்கிறது...

லட்சங்களைப் புறந்தள்ளி
லட்சியங்களோடு வாழும்
ஜெயதாஸே...
நீதி நேர்மை நியாயம்
சார்ந்து கர்வத்தோடு
வாழும் நண்பன்
ஜெயதாஸே...
நானும் இன்று
கர்வம் கொள்கிறேன்
நீ என் நண்பன் என்று...

புத்தகங்கள் இனி
தேவையில்லை இங்கு...
நீதி நேர்மையோடு
வாழ வழி சொல்வதற்கு...
ஜெயதாஸ் ஒருவன் போதும்
"இவனைப் போல் வாழ்"
என்ற ஒற்றை வரி
நமக்கு இருப்பதால்...

ஜெயதாஸே...
வெற்றிகள் உன்னை
விரும்பட்டும்...
என்றும் வாழ்க வளமுடன்..
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
😀👍🙏🍏🍎🎂🍰🌹🌺🌷

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (17-Apr-17, 2:08 pm)
பார்வை : 124

மேலே