மலரட்டும் என் இதயத்தாமரை

செந்தாமரை அழகா?
இல்லை உன்
முகத்தாமரை அழகா?
சூரியனைக்கண்டால்
தாமரை மலரும்
உன் முகத்தாமரையை
கண்டு இந்த சூரியன்
மலர்ந்தேன்
வாளுக்கு போட்டியா
உன் வானவில் புருவங்கள்

வேலுக்கு போட்டிய
உன் கூர் வேல்விழிகள்

தாமரை சிவப்பா
உன் கன்னங்கள் சிவப்பா
பட்டி மன்றம்
என் நினைவு மேடையில்

பெண் தாமரையே
கொஞ்சம் உன்
முகத்தமரையை மலரவிடு
மலரட்டும்
என் இதயத்தாமரை

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் ஆர்.பி.ஓம்
tag

எழுதியவர் : ஆர்.பி.ஓம் (18-Apr-17, 6:20 pm)
சேர்த்தது : RPஓம் 8056156496
பார்வை : 98

மேலே