தனிமை புறாவாகவே எனது வாழ்க்கைப்பயணம் - சகி

என்னைச்சுற்றி
பறக்கும் பறவைகள்
பலவிதம் ......

ஜோடிக்கிளியாக
பறந்து வாழும்
பறவைகளின் மத்தியில்
தனிமைப்புறாவாகவே
எனது வாழ்க்கை ......

சிறகுகள் இருந்தும்
மகிழ்ச்சியாக சிறகடித்து
பறக்கமுடியா தனிமை
புறாவாகிப்போனேன் ......

என்னுறவுகளனைத்தும்
என்னுடனிருந்தும் ஏனோ
என்வாழ்க்கை தனிமையாகிப்போனது ........

சந்தோசமாக பறக்கும்
பறவைகளை காண்கின்ற
நேரம் எனது விழிகளில்
ஏமாற்றமும் ஏக்கமும்
கலந்து கண்ணீருடன்
என்வாழ்க்கைப்பயணம் .......

இவைகள் எனது விதியோ
இல்லை கடவுளின் சதியோ
நானறியவில்லை ........

என் துன்பங்களை
நன்கறிவேன் ......

கண்ணீர்துளிகளே என்
துணையாகிப்போனது ......

என்றுமே எனது
வாழ்க்கைப்பயணம் தனிமைப்புறாவாகவே
தொடரும் .....

எழுதியவர் : sagi (18-Apr-17, 7:49 pm)
பார்வை : 726

மேலே