காதல் பகடை

அழகான பட்டாம்பூச்சியை
பார்த்ததும் மீன்
தன்னையே மறந்தது...

மீனுக்கு பட்டாம்பூச்சிமேல்
ஒருதலை காதல் உதயமானது
தினமும் கரையோரம்
சிறிதளவு நீரில் வந்து
தன் காதலியின்
வருகைக்காக
மீன் காத்திருந்தது...

ஒரு இனிய காலை
பொழுதினிலே மீன் தன்
காதலை பட்டாம்பூச்சியிடம்
வெளிப்படுத்தியது
பட்டாம்பூச்சியும் சம்மதம்
தெரிவித்தது..

பட்டாம்பூச்சியும் தினமும்
காலையிலும் மாலையிலும்
தன் காதலனை சந்திக்க
நீரில் தாழ்வாக பறந்தும்
மெல்ல நீரின் மேல் அமர்ந்தும்
இரண்டும் ஒன்றை ஒன்று
பார்த்து பேசி தன் காதலை
வளர்த்து கொண்டன...

இது கூடா காதல் என்று தெரியாமலே இந்த காதல் வளர்கிறது...

அன்பே....
இந்தகாதலை போல்
நம் காதலும் வளர்கிறது
நீ ஒரு மதம் நான் வேறு மதம்
நீ ஒரு சாதி நான் வேறு சாதி
கூடுமோ நம் காதல்
ஏற்குமோ நம் இரு குடும்பமும்
இந்த காதலை
என்ன பிரிந்து விடுவோமா...

சேர்ந்து வாழ
போராடுவோம் இறுதிவரை
முடிந்தால் சேர்ந்து வாழ்வோம்
இல்லையேல் சேர்ந்தே சாவோம்...
பிறகு வாழ்வாங்கு வாழட்டும்
இந்த சாதியும் மதமும்
கௌரவமும் உலகம் உள்ளவரை...

எழுதியவர் : செல்வமுத்து.M (19-Apr-17, 9:52 pm)
Tanglish : kaadhal pakatai
பார்வை : 179

மேலே