நட்பில் உயர்ந்த நண்பன்

நண்பர்கள் இருவர்
உயிர் நண்பர்கள்
இவர்கள் என்று
ஊரே பாராட்ட
அவ்விருவரில் ஒருவன்
திடீரென ஏதோ
விஷ ஜுரம் தாக்க
படுத்துவிட்டான்
படுத்த படுக்கையாக
மருந்தும் மருத்துவமும்
ஏதும் பயனளிக்கவில்லை
கடைசியில் உயிருக்கு
போராடும் நிலை

அப்போது மற்றந்த நண்பன்
தொழுகையில் முழு
நம்பிக்கை வைப்பவன்
தன நண்பனுக்காக
உயிர் தோழனுக்காய்
தான் வணங்கும் தெய்வத்தை
உளமுருக உள்ளதால்
வேண்டி நின்றான் ,
"இறைவா என் நண்பன்
மீது வைத்த நட்பு சத்தியமாயின்
அவனை சுகப்படுத்திவிடு
இல்லையேல் என் உயிர் கொண்டு
அவன் உயிர் காதிவிடு" என்று
வேண்டி நின்றான்

அவன் தொழுகைக்கு
தூய நட்பிற்கு இறைவன்
பதில் அளித்தான் போலும்
மறு நாளே அவன் நண்பன் பிணி
வந்த சுவடு தெரியாது மறைந்து போனது

நண்பர்கள் மீண்டும் கூடினர்
நட்பு வென்றது நமனையும்

ஆனால் யாரும் அறியார்
இந்த நண்பன் அந்த நண்பனுக்கு
தன உயிரையே பணயம் வைத்து
இறைவனை வேண்டியது
அது ஒரு நட்பின் தொழுகை
மௌன தொழுகை .
நமனையும் வென்ற தொழுகை !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Apr-17, 10:15 pm)
பார்வை : 273

மேலே