ஏனடி காதலால் கொல்லுகிறாய் 07

நீ
கலங்கரை விளக்கு....
நான் தத்தளிக்கும்....
கப்பலின் மாலுமி......
கரைசேர உதவிசெய்.....!

உன்
புன்னகையால்.....
சமாதியானவன்.......
சிரிப் பூக்களால்.....
அர்ச்சனை செய்துவிடு......!

ஒரு நொடியில்
என்ன செய்துவிடலாம்.........
என்று கேட்கிறார்கள் உயிரே....
இதயத்தை திருடிவிடலாம்......
என்று சொல்லிவிடு கன்னே....!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 07

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Apr-17, 8:32 pm)
பார்வை : 103

மேலே