மாலைதான் அழகு

நீர்நிறைந்த தண்ணீர்ப் பொழில் அழகு
தண்ணீர்ப் பொழிலில் விரியும் தாமரை அழகு
அழகுத் தாமரையில் ததும்பும் தேன் அழகு
தேனருந்தத் தேடிவரும் வண்டு அழகு
வண்டு விரித்திடும் சின்னச் சிறகு அழகு
சின்னச் சிறகு விரித்து வண்டு பாடும் இசை அழகு
இசை கேட்கும் இந்த இளங்காலை அவள் வந்தால் அழகு
அதை அவள் ஓத்திப்போட்டு மாலை வந்தால் ?
மாலைதான் அழகு !

...கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Apr-17, 9:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 268

மேலே