காதலில் தோற்ற இதயம்

காதலில் தோற்ற இதயம்.....
மெழுகுதிரி போன்றது......
பிறர் முன்னால் சிரித்து.....
தன்னை வருத்தும்.......!

இதோ
தெருவில் வாடிக்கிடக்கிறது......
நீ தூக்கியெறிந்த பூச்செண்டு......
பாவம் அதை நான் பறித்து....
உனக்கு தந்து அதன் இன்பதை.....
பிரித்துவிட்டேன்..........!

இரண்டு மலைகளுக்கு.....
நடுவே வடியும் நீர்போல்.....
உன் நினைவுக்கும் கனவுக்கும்.....
நடுவில் நான் அழுகிறேன்.......!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 198

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Apr-17, 8:31 pm)
பார்வை : 1090

மேலே