காதல் எனும் வானிலே

உன் அழகில்
நனைகிறேனடி
குடை கொண்டுவா உன் மேலாடையை...
உன் நெஞ்சில்
நிரம்பி வழிகிறேனடி
குடம் கொண்டுவா உன் கன்னக்குழியை...

என் இதயமெனும் ஏட்டில்
உன் விழிகள் சொன்ன
வரிகளை
புதுகவிதையாக்கினேன்
படித்துபாரடி என் இதயத்தை திறந்து..

நீல கடலின்
ஆழத்தை அளவிட முடியும்
என்னவளே உன்மேல் நான்
கொண்ட காதலின் ஆழத்தை
அளவிட முடியாது...

கோடி பூக்களின் வாசம் அழிந்துவிடகூடும்
என் கண்மணியே உன்மேல்
நான் கொண்ட நேசம் அழிந்துவிடாது...

மண்ணாக நானிருப்பேன்
உன் பாதங்களை
தாங்கிக்கொள்ள
பொன்னாக நானிருப்பேன்
நீ என்னை உன் கழுத்தோடு
சூட்டிக்கொள்ள...


Close (X)

0 (0)
  

மேலே