பிரியாவிடை நாள்

பள்ளி காலங்கள் முடிந்து
பல கல்லூரி கனவுகளுடன்
கண் இருந்தும் பிம்பமறிய
குழந்தைப் போல் முகமறிய
ஆரம்பகால கல்லூரி நாட்களில்
விழிகளாய் அமைந்தது நட்பு....

தனிமையில் சில நாட்கள் நகர
பின் கைக் கோர்த்துக் கொண்டு
உலகை சுற்றிக் காட்டி-வெளி
உலகை பற்றி அறிய செய்தது நட்பு....

பல வேறுபாடுகள் கொண்டிருந்தும்-அரை
நொடியில் அன்பைப் பகிர்ந்து கொண்டு
நண்பர்களாக உயிரில் கலந்தோம்....

நண்பனின் இன்பத்தையும் துன்பத்தையும்
பகிர்ந்து கொண்டு உறவுகளே
போற்றும் உன்னதமான உறவானோம்....

ஒரு தாய் பிள்ளைகளைப் போல்
ஒன்றிணைந்து மதிய உணவை பகிர்ந்து
உண்பதன் மூலம் மரத்தடியையும்
அறுசுவை உணவகமாக மாற்றினோம்....

நண்பனுக்கு தேவை என்றால்
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி
தேவையை தெரியாமல் பூர்த்தி செய்வோம்....

வகுப்பறை நட்பிற்கு ஈடாக
பேருந்து நட்பு வட்டங்களை
பெரிதாக்கி பயணங்களை பயனுள்ளதாக்கினோம்....

விடுதியில் விழிகள் உறங்காமல்
விடியும் வரை சட்டமன்றம்
அமைத்து அரட்டை அடித்தோம்....

நண்பர்களின் பிறந்தநாட்களின் மூலம்
மாதம் பல பிறந்தநாள் கொண்டாடினோம்....

தொழிற்சாலை பயணம் என்ற பெயரில்
ஊர் பல சுற்றி
சுதந்திர பறவைகளாய் பறந்தோம்....

இறுதி தேர்வுகள் என்று ஒன்று வந்தபின்
நண்பனையும் ஆசானாக்கி ஆண்டுகள்
பல வைத்த arrears-யை
அரை மாதத்தில் தேர்ச்சியடைந்தோம்....

இன்றோ நம் கல்லூரியின் இறுதி
நாளில் பிரியமுடியாமல் பிரியாவிடை
கொடுக்க ஒன்றுக் கூடியுள்ளோம்....

- ஆ.மு.ராஜா

எழுதியவர் : ஆ.மு.ராஜா (21-Apr-17, 6:28 pm)
Tanglish : piriyavidai naal
பார்வை : 1396

மேலே