நினைவுகளோடு

நினைவுகளோடு வாழ்ந்து விடலாம்
கனவுகளிலே ஆழ்ந்து விடலாம்
நிஜத்தில் நடந்ததை சேர்த்துவைத்து
வயதுகள் கரைந்திட அசைபோடலாம்
வலிகளும் அதிகமாய் இருந்திடலாம்
வருத்தங்கள் வாழ்க்கையை தூர்த்திடலாம்
அழகிய நினைவுகள் சேமித்து
வலிகளுக்கு மருந்தாய் ஆக்கிடலாம்
சிரிப்புகள் மட்டும் வாழ்க்கையில்லை
வெற்றிகள் மட்டும் வாழ்விலில்லை
சிதைவுகள் ரணமாய் ஆகிடுமே
வரைமுறை இன்றி வாட்டிடுமே
அனைத்தையும் தாங்கிட நாம்சாமியில்லை
வினைகளை பொறுப்பதே முடிவதில்லை
பூக்களும் உதிர்ந்துபின் மலர்ந்திடாதோ
வாழ்க்கையும் வெளிச்சத்தை கொடுத்திடாதோ
விடிவை நோக்கியே போராட்டம்
அதுவரை தொடரட்டும் நம்ஓட்டம்
வெற்றியைப் பெற்றப்பின் ஓய்வுயில்லை
இலக்கினை மாற்றிட மலரும்முல்லை
சுகங்களும் சுமைகளும் வாழ்விலுண்டு
நினைவுகள் தாங்கிட இதயமுண்டு
நல்லதை தங்கிட அனுமதிப்போம்
பொல்லாத நினைவுகள் நாமழிப்போம்