காணாமல் போகும் பழமை

புதியன வர வர‌
பழையன மறக்கிறோம்..
வயதான முதியோரையும்
மறதியில் சேர்க்கிறோம்..

கலாச்சாரம் பண்பாடு
பலவற்றை மறந்துவிட்டு
புதிதான சமாச்சாரம்
பலவாழ்க்கையிலே சேர்க்கிறோம்..

பழமையின் குரல் தேயத் தேய‌
இழக்கிறோம் பல அனுபவங்களை
சந்திப்போம் பல அவமானங்களை

நமக்கும் வயது ஏற ஏற‌
வருங்காலத்தை எப்படி அமைத்தோமோ
அதுவே நமக்குத் திருப்பிக் கிடைக்கும்..

மறந்துபோன பட்டியலில்
காந்தியையும் சேர்த்திருப்போம்
பணத்தில் அவர் உள்ளதனால்
தினமும் அவர்முகம் பார்த்திருக்கோம்.....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Apr-17, 11:14 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 827

மேலே