மாணவா - இங்க வாடா கண்ணு
யாரைப் பாட்டிம்மா 'மாணவா' -ன்னா கூப்புட்டீங்க?
😊😊😊😊😊
ஏம் பேரனத்தாண்டி கூப்பிட்டேன்.
😊😊😊😊😊😊😊
நீங்க எப்ப பாட்டிம்மா ஆசிரியர் ஆனீங்க?
😊😊😊😊😊😊😊
எம் மவனோட உயிர்த் தோழன் இந்திக்காரப் பையனாம். அவம் பேருதான் மாணவனாம். அந்தப் பேரையே எம் பேரனுக்கு வச்சுட்டாண்டி, தாமரை.
😊😊😊😊😊😊😊
நாம தமிழர்கள் தான் தமிழ்ல பேருக்குப் பஞ்சம் வந்த மாதிரி நம்ம பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கிறோம். இந்திக்காரங்க லட்சக்கணக்காவங்க தமிழ் நாட்டில வாழ்ந்திட்டு இருக்கறாங்க. அவுங்கள ஒருத்தருகூட தப்பித் தவறிக்கூட தன்னோட பிள்ளைக்குத் தமிழப் பேர வச்சதா வரலாறு இல்லை. உங்கப் பேரன் பேரு மாணவனா இருக்காது. 'மாணவ்' -வா இருக்கும். 'மாணவ்' -ன்னா 'மனிதன்' -ன்னு அர்த்தம் பாட்டிம்மா.
😊😊😊😊😊😊😊
அடக் கண்றாவியே! பெத்த கொழந்தைக்கு 'மனிதன்' -ன்னா பேரு வைக்கிறது?