நாட்டி சுட்டி பானுக் குட்டி

இங்க வா சுட்டி
ஸ்கூல்ல இன்னிக்கி மிஸ் கேப்பாங்க இல்ல ?
A FOR ஆப்பிள் சொல்லு என்று சொன்னாள் அம்மா நர்சரி மழலை இடம்
A யிலிருந்து H வரை சரியாக சொல்லிக் கொண்டு வந்து அடுத்து
I FOR தோசை ! என்றது !

என்னடி சொல்லறே ?

ஆமாம் தோசைதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஐ ---தோசை சரிதானே என்று அழகு காட்டினாள் .

ஐயோ ஸ்கூல்ல போய் இப்படி சொல்லி வைக்காதே
சுட்டி குட்டி நாட்டி பானு தோசைப் பாட்டி !

அடுத்த அறையிலிருந்து அப்பா பாடிக் கொண்டே வந்தார்
ஐ for தோசை
யு for தோசை
ஷி for தோசை !
புது நர்சரி ரைமா ? நீங்களே குழந்தையை கெடுத்திடுங்க !

சுட்டி நாட்டி பானுக் குட்டி ரெடியா ?
முதுகில் பை லஞ்சு பாக்ஸ் கையில் ஸ்டரா வாட்டர் பாட்டில்
ரெடி டாடி என்றாள் .
டாடி மம்மி என்ன பாட்டின்னு சொல்றா !

அவதான் பாட்டி நீ வாடா என் தோசைச் செல்லம் ! என்று சொல்லி
குழந்தையை பக்கத்திலுள்ள நர்சரிப் பள்ளியில் கொண்டுவிட்டு போனார் .

மிஸ் வந்தார்

GOOD MORNING மிஸ் ! குழந்தைகள் கோரஸில்

ஓகே . நேற்றைக்கு சொல்லிக்கொடுத்த A for ஆப்பிள் எல்லாரும் படித்துக் கொண்டு
வந்திருக்கீங்களா ?
YES MISS ----கோரஸில்
சரி ஒவ்வொரு லெட்டரா ஒவ்வொருத்தர்ட்டையும் கேட்பேன் சரியா சொல்லணும்
முதல் குழந்தையிடம்
A for ஆப்பிள் 2 வது குழந்தை B for BAT 3 வது C for CAT D for DAY 4 வது E for ELEPPHANT
5 வது குழந்தை F for FLOWER 6 வது G for GOD 7 வது H for HAIR
அடுத்து பானுவிடம் மிஸ் கேட்டாள்
பானு சொல்லு I for ?
பானு... ஐ for தோசை !
குழந்தைகள் எல்லோரும் சிரித்து விட்டார்கள் . மிஸ்ஸாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை .
அடுத்த குழந்தை அதற்கடுத்த குழந்தை என்று மீதிக் குழந்தைகளும் ஐ for தோசை என்று
சொல்லியது.
ஆனாலும் மிஸ் பொய்யாக சற்று கோபத்துடன்
நாட்டி பானு மாதிரி இப்படி தப்பா சொல்லக் கூடாது சொன்னா பனிஷ்மென்ட்
கொடுப்பேன் . இப்ப சரியா சொல்லுங்க I for ....

I for INDIA ...........எல்லோரும் கோரஸில்

ஏய் பானு நீ மட்டும் வாயை மூடிண்டு உம்முனு இருக்க
இன்னிக்கு லஞ் பாக்ஸில் தோசை தானே ?

YES MISS ..

பின்ன சரியா சொல்லு செல்லம் I for ....

I for கொஞ்சம் யோசித்து விட்டு I for INDIA தோசை !

மிஸ் : !!!!!!

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Apr-17, 10:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 200

மேலே