உன் விழிகளை பார்த்திருப்பேன்

கனவுகள் யாவும் நீயே
என்றாலும்
நான் உன் விழிகளை
பார்த்து வாழ்வதே
கனவாக வேண்டுமடி
இந்த வரத்தை நான்
பெற இன்னும் எத்தனை
தவங்கள் புரிவதடி
உன் விழிகள் பேசும் கவிதைகள்
நான் எழுதும் கவிதைகள்
அல்ல பெண்ணே
எனக்கு மட்டும் புரியும்
நேச கவிதைகளடி
உன் ஓரக்கண் பார்வை
என் மீது பட்டால்
அது என் பாக்கியமடி
P

எழுதியவர் : சுருதி சந்திரன் (22-Apr-17, 1:57 am)
சேர்த்தது : ஸ்ருதிச்சந்திரன்
பார்வை : 122

மேலே