பூகோளத்தின் பூபாளம்
திருநெல்வேலி சீமையில்
உதித்து சென்னைப்
பட்டினத்தில் பணிபுரியும்
பொறியாளர் விஜயா
ஆன்டனி விஜயாவிற்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்!
இவர் பிறந்த ஊர் பெருமை
கொண்டது அனைத்து
அம்சங்களும் ஒருங்கே
அமையப் பெற்று
அழகிய மகளாய் அங்கு
பிறந்ததால்...
விஜயா பயின்ற
பள்ளிகளும்
கல்லூரியும்
பூரிப்படைந்தது...
முதன்மையான
மதிப்பெண்களால்
தானும் வளர்ந்து
கல்லூரியையும்
பெருமையடையச்
செய்ததால்..
விஜயா பணியாற்றும்
சதர்ன் ரயில்வே
மகிழ்ச்சி கொள்ளும்
அதன் நம்பிக்கை
நட்சத்திரமாய் திகழ்வதற்கு...
இருக்கும் இடமெல்லாம்
சிறப்பு சேர்ப்பதில்
அன்பெனும் மலர்கள் பூத்த
நந்தவனத் தென்றல் இவர்..
எளிமையாய் இருப்பதும்
காலத்தே பணிசெய்வதும்
நல்ல நண்பர்குழாம்
கொண்டிருப்பதும்
எதையும் செம்மையாய்
நேர்த்தியாய்ச்
செய்வதிலும் இருக்கிறது
இவரின் வலிமை...
நட்புக்கு முக்கியத்துவம்
கொடுத்துப் பழகும்
ஆன்டனி விஜயாவின்
மனதின் விசாலம்
அவரின் விலாசம்...
"அன்போடு வாழ்பவர்
பண்போடு வாழ்பவர்"
என்னும் வரியில்
இருக்கிறது இவரது முகவரி...
இவர் பெருமை
கொள்ள வேண்டிய
தருணங்களிலெல்லாம்
கர்வம் தவிர்த்தும்
பிறர் பெருமை கொள்ளும்
தருணங்களிலெல்லாம்
பொறாமை தவிர்த்தும்
இவர் வாழும் இயல்பான வாழ்க்கை
நமக்குப் பிடித்திருக்கிறது...
கர்வம் இவருக்கில்லை
எனச் சொல்வதில்
கர்வம் கொள்கிறோம் நாம்...
முப்பத்தொன்று வருட
பணி அனுபவம் கொண்ட
இருபத்தொன்று வயது
இளைஞியாகவே
இன்னும் இருக்கிறார்
ஆன்டனி விஜயா
ஐம்பத்தொன்று
தாண்டியும்...
கல்வி மற்றும்
பணிகளில் இவர்
காட்டும் திறமைகளில்
வயதுக்கு மீறிய
முதிர்ச்சி காட்டினாலும்
பழகுவதில் இன்னும்
குழந்தையாகவே
இருக்கிறார் வெள்ளைச்
சிரிப்புடன்...
ஆன்டனி விஜயா...
படிக்க வேண்டிய
வயதுகளில் படித்ததால்
வெற்றிகள்
இவரை விரும்புகிறது...
சிலுவைகள் இட்டு
இவர் செய்யும் செயல்கள்
சிறகுகள் கொண்டு
வெற்றிகள் நோக்கி
என்றும் பயணிக்கும்...
நட்பென்றால்
எல்லா நிறுத்தங்களிலும்
நின்று போகும்
பாசஞ்சர் ட்ரெய்ன் போன்று
நண்பர்கள் ஒருவர் விடாமல்
அனைவரையும் நலம்
விசாரிப்பதிலும்...
வேலையென்றால்
குறிப்பிட்ட நிறுத்தங்களில்
நின்று போகும்
எக்ஸ்பிரஸ் ட்ரெய்ன் போன்று
இடைவிடாமல் பணிபுரிவதிலும்
இவர் பணியாற்றும்
புகைவண்டித் துறையை
நினைவுபடுத்துகிறார்...
ஆன்டனி விஜயாவின்
பிறந்த நாளில் மேலும்
ஒரு சிறப்பு உண்டு...
தோழி விஜயாவின்
பிறந்த நாளும்
என்மகள் சுப்ரஜாவின்
பிறந்த நாளும்
ஒன்று அது இன்று...
சித்திரையில் பிறந்ததால்
வெற்றி முத்திரைகள்
இவர்களுக்கு எளிதாகியதோ
தமிழ் வருடத்தின்
முதல் மாதத்தில்
பிறந்ததால்தான்
முதன்மையாகத்
திகழ்கிறார்களோ
இவர்கள்...
ஆன்டனி விஜயா...
என்றும் வளமுடன்
பல்வேறு சிறப்புகள்
பெற்று பல்லாண்டு
பார்போற்ற வாழ்வாங்கு
வாழ்ந்திட அன்பு
நண்பனின் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
😀👍🌷🌹🌺🎂🍰🙋🏻♂