ஒருபக்க காதல்கதை பாகம்-24

தன்னுடைய மன எண்ணங்களை, சந்தோஷங்களை, கவலைகளை அவள் யாருடனாவது பகிர்ந்தால் அவளை பற்றி அவள் மேல் "அவள் அப்படிதான்" என்ற எண்ணம் திணிக்கப்படும், முக்கால்வாசி அது கெட்ட எண்ணங்களாகவே இருக்கக்கூடும் என்பது அவளென்னம், மனித சமுதாயத்தில் மேல் அவள் கொண்ட நம்பிக்கை அவ்வளவே. இதனால் உயிரற்ற தனது டைரியை சக தோழியாய் நினைத்து அதற்கு ஆளவந்தான் நந்துவைப்போல் உயிர்கொடுத்து தினமும் தன்னுடைய அனைத்தையும் பகிர்ந்து வருகிறாள். ஒரு பெண்ணின் தனிப்பட்ட எண்ணங்களை அறிவதற்கு படைப்பாளனான எனக்கும் அனுமதி இல்லை, இருந்தாலும் இவ்வொருமுறை..(தயவு செய்து அவள் நினைப்பதுபோல் இதை படித்த பின்பு அவள்மேல் "அவள் அப்படிதான் " என்கிற முடிவிற்கு வராதீர்கள்..அந்த நிச்சயம் இல்லையெனில் இந்த பகுதியை தவிர்த்துவிடலாம்)


அன்புள்ள டைரி,

இன்று நலம், அவனின் சேஷ்டைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது, மனதில் 100 சிந்தனைகளில் ஒற்றிரெண்டு அவனை பற்றியும் வருகின்றன இருந்தாலும் அவனின் எதிர்பார்ப்புகள் என்மனத்துக்கு ஏற்றவாரில்லை, நீ அறியாததா..பார்க்க அழகாய்த்தான் இருக்கிறான் அவன் உடுத்தும் உடையும் உடுத்தும் விதமும் ஒருநாளும் எந்தப்பெண்ணும் இச்சைகொள்ளும் அளவிற்கு அணிந்ததில்லை (குறிப்ப: கால்ச்சட்டை இடுப்பை விட்டு இறங்கவில்லை, இறங்கினாலும் தன் மேல் சட்டை அவற்றை மறைப்பதில் உறுதியாய் இருக்கிறான், இருந்தாலும் முன்னுள்ள முதல் பொத்தானை மார்பு முடித்தெரியவே திறந்து வைக்கிறான்..இயல்பிலேயே வசீகரிக்கக்கூடிய உடம்பை பெற்றாலும் பெண்கள்போல் பெரிய அளவு ஆடைகளால் காவல் காத்துக்கொள்கிறான்..இருந்தாலும் நம் கண்ணனுக்கு தெரியாமல் போய்விடுமா..அங்கங்கள் யாவும் கணிசமான கச்சிதம்..பின்னகம் கொஞ்சம் தூக்கல்தான்.ஆனாலும் தொப்பை சற்று வருத்தம் தரக்கூடியது.பரவாயில்லை.. ) ...கண்ணை பார்த்து பேசும்பொழுது சற்று நேரம் தப்பாக பார்த்துவிடக்கூடாது என்பதற்காக..வேறெங்கோ நோக்குகிறான்..பெண்களிடம் அவ்வளவாக பேசியதில்லை போலும்..அவன் பேச்சும் பார்வையும் கொஞ்சம் வசீகரிக்கத்தான் செய்கிறது..அவற்றை கூடுமானவரை தவிர்க்கவே பார்க்கிறேன் ..அதற்காக அவனின் கைவிலங்கிற்கு என்கைகள் போதாது, என்னாலும் எந்நாளும் முடியாது..அவன் என்னை அடைய நினைக்கிறானோ என்னோடு வாழ நினைக்கிறானோ என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது..நீ கேக்கலாம் ...நீ யாரைத்தான் நம்புவாய் என்று..பட்ட துன்பங்களும், வதைகளும் யார்மேலும் நம்பிக்கையை கிழிக்கிறது..ஏன் செய்வேன் ..நான் நம்பும் ஒரே ஆள் நீதான்..உனக்குத்தான் என்மேல் எந்தவித எண்ணமும் இல்லாமல் பார்க்கிறாய்..இவ்வுலக மனிதர்கள் மலம் போல் மனம் கொண்ட மாடுகள்...வேறு வழியில்லை மலமல்லியே வாழ்க்கை நடத்தவேண்டி உள்ளது..நீ கேட்பது எனக்கு புரிகிறது..உனக்கு எந்த ஆண்மகனைத்தான் பிடிக்குமென..எனக்கு அப்துல் காலமையும், விவேகானந்தரையும் தான் பிடிக்கும், அவர்களின் சிந்தனைகளுக்காகவும், சாதனைகளுக்காகவும் அல்ல கடைசி வரை திருமணம் ஆகாமல் இருந்தார்கள் என்பதற்காக மட்டுமே ..

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (22-Apr-17, 8:18 am)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 312

மேலே