சகியின் திகில் இரவுகள்

அதிகாலை 3 மணி வழக்கபோல் ராம்  பாத்ரூம் செல்ல எழுந்தான்.அவன் மனைவி அருகில் இல்லாததை கண்டு திடுக்கிட்டான் ஹாய் டியர்..
என்றவன் அறை முழுவதும் தேடினான்.எங்கே அவள் என மனதில் முனுமுனுத்து கொண்டு
வர அவன் தலை மேல் சகியின் கால் பட மேல் பார்த்தவன் சிறுநீர் கழித்து விட்டான்.மேல் புறம் அவள் தூக்கில் தொங்கினாள்.அவனுக்கு ஒன்றும் புரிய வில்லை .அலரிஅடித்து அம்மா என கத்தி கொண்டு ஓட அவனுடைய அம்மாவும் அப்பாவும் என்னப்பா ஆச்சு என ஓடி வர திடுக்கிட்டு சகியை பார்த்து மிரண்டு
போனார்கள்.நாக்கு வெளியே தள்ளி கண்கள் மிரட்டும் நிலையில் தொங்கினாள்.சாதி சனம் படையெடுக்க பல சந்தேகங்களுக்கிடையே சகியின் இறுதி ஊர்வலம் முடிந்தது.பல கேள்விகள் திக்குமுக்காடி விட்டான்
ராம்.மூன்றாம் நாள் பால் தெளித்துவிட்டு வந்தவன் மனம் சலனத்தால் தூங்கிவிட்டான் இரவு மணி 12 ஐ தாண்டியது.ராம் அம்மா கத்தும் சப்தம் கேட்க எழுந்தவன்.அருகில் செல்ல சகியின் குரல் ஏன்டீ ஏன் இந்த கொடுமை நானும் உன்ன மாதிரி ஒரு பெண்தானே மெடிக்கல் ரிப்போர்டில உன் பிள்ளைக்குதான் கவுண்ட் கம்மியா இருக்கு இவனுக்கு எத்தனை கல்யாணம் பன்னாலும் வேஸ்ட்டீ.
பொண்ணுங்க என்னடி பன்னுவாங்க ஆம்பளை மேல குறைஇருந்தா.நாங்க வேற கல்யாணம் செஞ்சி குழந்தைய பெத்துகிட்டா ஏத்துக்க மாட்டிங்க.ஆனா வேற எவனுடைய திரவத்த சுமந்து குழந்தைய பெத்து தரனும்.எதுவுமே தெரியாத என்ன கொண்ணுட்டீயே..
என கத்த அலறியது அறை ராம் விபூதியை அவள் மேல்தூவ என்டா
என் மேல தூவறத விட்டு உன் நெத்தியில வச்சுக்கிடா என்றவள் அவனின் அம்மாவை ஓங்கி அடித்தாள் மண்டை முழுவதும் ரத்தம் வந்து அலரினாள்.அவளுடைய புடவையை எடுத்து கழித்தில் மாட்டி மின்விசிறியின் மேல் தொங்கவிட்டு சுவிட்சை தட்டினாள்.
ஆட்டம் போட்ட அவன் அம்மா அடங்கிவிட்டாள் மின்விசிறியுடன் அவளும் சுற்ற சுற்ற அவளுடைய ஆவி ஆட்டம் கண்டது.
அடுத்து முழுபோதையில் தூங்கிய மாமவும் மின்விசிறியில் பிணமாய் தொங்க.ராம் சகியை பார்த்து என்ன விட்டுவிடு என கெஞ்ச நீ வாழ்ந்து என்ன பன்னபோற என கேட்டாள்.
வாழனும் ஆசை என்றான்...
யார் கூட என கேட்டாள் சகி..
தீடிரென்று சூரிய வெளிச்சம் வர ஆவி அதன் இருப்பில் தேய்ந்தது
சகி நாளைக்கு இரவு வருவேன் என்றாள்..
அப்பா அம்மா அடக்கம் செய்தவன்
வீட்டில் மந்திரவாதி துணையுடன்..
மறுநாள் இரவு 12 மணி சகி வேகமாக வந்தவள்
உயிருடன் இருக்கும் போதும் போராட்டம்.
மாமனார் மாமியார் இருவரும் பிள்ளையை காப்பற்ற ஆவியாக ஆட்டம் போட
சகி உயிர் மெயின் உச்சகட்டத்தில்
தாக்க ஆவி ஓட்டம் பிடித்தன.
மந்திரவாதி போதையில் இருந்ததால் சகி அவன் கழுத்தை மின்விசிறியில் சுற்ற வைக்க பதறினான் ராம்..
ராமை அவள் கை பற்ற அழுதாள் உண்மையாக அவன் மேல் காதல்
கொண்டதால்..
அவனை அடிக்கவும் அணைக்கவும்
முடியவில்லை..
காற்றில் மிதக்கும் சேலையும் கடலில் அடிக்கும் அலை போல அந்த பெண் மனது பிரபஞ்சத்தில் கரைய அவள் ஆண்களின் குணம் உறவுகளின் மனம் இதை சொல்ல முடியாமல் அழுது கண்ணீரில் கலந்தாள்...
அவனின் பார்வை படாமல் விலகினாள் மெல்ல. பிறப்பு எனும் வட்டம் அவளை உள் இழுக்க
அந்த உயிர் மீண்டும் உயிர் எடுக்க
கருவை தேடியது...
கருணை மனதோடு பிள்ளையில்லா தம்பதியை பார்த்து ஏங்கியது...
விரைவில் வாழ வருவேன் என உரத்த குரல் கேட்க கற்பத்தில்
புதிய உயிர்..

எழுதியவர் : சிவசக்தி (22-Apr-17, 2:56 pm)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : sakiyin iravugal
பார்வை : 405

மேலே