நட்பே

நட்பே ...

ஒரு அன்பு சொல்
நீ சொன்னால்
அன்பிலே
ஆலயம் செய்வேன் ...

ஒரு நேச பார்வை
நீ தந்ததால்
கோடி ஜென்மம்
உனக்காக
எடுப்பேன் ...

ஒரு புன்னகை
நீ காட்டினால்
உலகே நீயென
வாழ்வேன் ..

ஒரு முத்தம்
நீ தந்ததால்
உன் காலடியே
சித்தம் என்பேன் ..

என்னை காணும்
போதெல்லாம்
எரிந்துவிழுகிறாய் ..

யாரையோ
குளிரவிக்க
என் மீது
வெண்ணீர்
பாய்ச்சுகிறாய் ......



தெரிந்தும்
தெரியாது போல
நடிக்கிறேன்...
நீ அழக்கூடாது
என்பதிற்காக ...

நட்பு என்பது
மனதின் ஒலி.
அன்பின் மொழி ..
நான் உனக்காக
வாழ்ந்து விட்டு
போகிறேன் ...

எனக்காக
நீ வாழ்வதாக
முதுகில்
குத்ததே .....

நெஞ்சில் குத்து
அதுதான்
நட்புக்கு அழகு ...

உன்னை எதிர்க்க
நான் இல்லை
ஒதுங்கி கொள்கிறேன்

மகிழ்ச்சியான இடத்தில
மகிழ்ச்சியாகிய இரு ..

எழுதியவர் : நாஞ்சில் இன்பா (23-Apr-17, 1:53 pm)
சேர்த்தது : இன்பா மு ஞாசெ
Tanglish : natpe
பார்வை : 722

மேலே