இப்படித்தான்

.....................................................................................................
இப்படித்தான்..!
விளைநிலத்தில் கட்டடம் ;
மொட்டை மாடியில் தோட்டம்...
யானையைக் கொன்று தந்தம்;
தந்தத்தில் செய்த யானை...
குளத்தை தூர்த்து நீர்த்தொட்டி;
தொட்டியில் ஊற்ற இன்னொரு குளம்..
வாழ்வதற்காகப் பணம்...
வாழ்வைத் தொலைத்து வருமானம்...! !
ஆறறிவும் பேராசையும்
இணைந்திருந்தால் இப்படித்தான்..! ! !