சிந்தா பாத்துன்னா தண்ணிய வீணடிக்காம குளிக்கறதா
ஏண்டா திருமலை, அங்க பாரு. தெருவில செவப்புக் கொடியப் பிடிச்சிட்டு நெறையப் பேரு என்னவோ சொல்லி 'சிந்தா பாத்து, சிந்தா பாத்து' - ன்னு ஒரக்கக் கத்திட்டு போறாங்க. 'சிந்தா பாத்து'-ன்னா என்னடா திருமலை?
😊😊😊😊😊😊😊
பெரிம்மா நானும் உங்க மாதிரியே படிக்காதவன். நீங்க வளர்த்த பையன் நான். உங்கள மாதிரியே எனக்கும் சினிமா டிவி பாக்ககற கெட்ட பழக்கமெல்லாம் கெடையாது.நீங்க கேட்ட கேள்விக்கு என்ன பதில்ன்னு தெரில பெரிம்மா.
😊😊😊😊😊😊😊☺☺
உம் பையன் பாண்டியனை எதோ பணம் அதிகமா வசூலிக்கற பள்ளிக்கூடத்தில படிக்க வைக்கற. அவன் நேத்து பாடம் படிக்கறபோது 'பாத்து' 'பாத்து' - ன்னு சொல்லிட்டிருந்தான். 'பாத்து'க்கு என்னடா அர்த்தம்னு கேட்டேன். அவஞ் சொன்னான் "'பாத்'துன்னா குளிக்கறது பாட்டிம்மா"-ன்னு. மக்கள் குடிக்கறதுக்கே தண்ணி கெடைக்காம அலையறாங்க. இப்பத்தாண்டா திருமலை எனக்கு அந்த 'சிந்தா பாத்து'க்கு அர்த்தம் புரியுது. அந்த செவப்புக் கொடி பிடிச்சுட்டு ஊர்வலமா போனவங்க தண்ணிய சிக்கனமா பயன்படுத்தச் சொல்லறாங்கபோல. அப்ப, 'சிந்தா பாத்து' -ன்னா 'தண்ணிய வீணடிக்காம சிக்கனமா குளியுங்க'-ன்னு மக்களுக்கு எச்சரிக்கை பண்ணீட்டு போறாங்கடா, திருமலை.
😊😊😊😊😊😊
ஆமாம் பெரிம்மா. நீங்க சொல்லறது சரியா இருக்கும் பெரிம்மா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢
(Zindabad = long live.Persian origin. Used in Urdu-Hindi). உருதும் இந்தியும் சகோதர மொழிகள். தமிழகத்தில் உள்ள சில தொழிற் சங்கங்களும், பொதுவுடமைக் கட்சியினரும் 'வாழ்க' என்ற தமிழ்ச் சொல்லைத் தவிர்த்து Zindabad என்றுதான் சொல்வார்கள்.

