அவன் இவன்
அவன் இவன்
உடுத்த உடுப்பில்லை என்றான் இவன்
எடுத்த உடுப்பு சரியில்லை என்றான் அவன்!....
படுக்கப் பாயில்லை என்றான் இவன்
படுத்த மெத்தை மெதுவாய் இல்லை என்றான் அவன்....
படிக்க வைக்க வசதியில்லை என்றான் இவன்
படிக்கும் பள்ளி வசதியாய் இல்லை என்றான் அவன்...
வேலை கிடைக்கவில்லை என்றான் இவன்
கிடைத்த வேலை சரியில்லை என்றான் அவன்...
பசி போக்க உணவு வேண்டும் என்றான் இவன்
ருசி மிக்க உணவு வேண்டும் என்றான் அவன்....
கல்லிலும் கடவுள் கண்டான் இவன்
கடவுளையும் கல்லாக்கினான் அவன்....