நானாக நானில்லை

நானாக நானில்லை....
தன் அன்பு வட்டத்தில்
சுற்றும் பம்பரமாக்கினாள் அம்மா. . .
தான் அடையாத இலட்சியத்தை
எனது இலக்காய் குறிவைத்தார் அப்பா. . .
அட்டை முதல் அட்டை வரை
மனனம் செய்ய
நகலெடுக்கும் கருவியாக்கியது பள்ளி. . .
பணம் பண்ணுவதே
படிப்பின் இலட்சியம் என்றது கல்வி. . .
வேலையன்றி வேறொன்று அறியா
இயந்திர மனிதனாக்கியது பணியிடம். . .
அடுத்த வீட்டுக்காரனை
அயலானாய் பார்க்கும்
போலி கவுரவ வேடம் அணிவித்தது சமூகம். . .
என் பரம்பரையை சோம்பேறியாக்க
இராப்பகலாய் உழைத்தது என் மூளை. . .
சு.உமாதேவி