முடிவின் முற்றுப்புள்ளி

முடிவின் முற்றுப்புள்ளி ...
************************************

முகத்தில் தெரிகிறது
அகத்தின் பக்கங்கள் ...
கவலையில் தெரிகிறது
காலத்தின் சுவடுகள் ...
வயோதிகத்தில் தெரிகிறது
வாழ்க்கைப் பாதை ...
பார்வையில் தெரிகிறது
ஏக்கத்தின் விளம்பு ...
காட்சியில் தெரிகிறது
சூழலின் சுழற்சி ..
முடிவாய்த் தெரிகிறது
முடிவின் முற்றுப்புள்ளி ...

பழனி குமார்
27.04.2017

எழுதியவர் : பழனி குமார் (27-Apr-17, 8:18 am)
பார்வை : 778

மேலே