சாவின் ஒத்திகை காலைப் பொழுது
கரைந்த இரவு பகலின் அரை உருவம்
நிலவின் தற்காலிக விடை பெறுதல்
சேவலின் சங்கீத கச்சேரி
மனிதனின் சாவின் ஒத்துகை முடிவு
கடல் நீர் உடை மாற்றும் நிகழ்வு சோம்பி திரிபவன் கண்டிராத வைரம்
புத்திசாலி அறிந்த புதையல்
நித்திரை கடவுள்கள் விழித்து கொள்ள அடிக்கும் கோவில் மணி
வீட்டின் முற்றங்கள் நீராடும் நேரம்
முற்றத்தின் நெற்றியில் புள்ளி பொட்டு இடும் நேரம்
தன்னம்பிக்கை தலைதூக்கும் தருணம்
- பே.ருத்வின் பித்தன்