விவசாயி
இரவெல்லாம்
அவளை
நினைத்துக்கொள்....!
கனவிலும்....
ஏன்
அருகில்
இருந்தால்
நினைவிலும்....!
உணர்வுகள்
கட்டுப்படுத்த
முடியாத
வலி....!
சூரியன்
சுட்டெரித்தாலும்...
அவளின்
கோபப்பார்வைக்கு
ஈடாகுமா?
செய்யும்
தொழிலின்
நடுவே கூட
அவளின்
எழிலின்
அழகை நினைத்துக்கொள்..!
ஆனால்...
உன் காதல் பசி
போக ...
வயிற்றுப்பசிக்கு
உணவு
உண்ணும்போது
"விவசாயி"யை
மட்டும்
நினைத்துக்கொள்...
ஏன் எனில்
உணர்வுகளின்
வலியை விட
உணவு
இல்லாமல்
ஏற்படும் வலி...
உயிரை
மாய்க்கும் வழி...!
நாம் உண்ணும்
அரிசியில்
நம் பெயர்
எழுதிருக்கிறது...
என்று சொல்வார்கள்....
அரிசியே
அழிகிறது என்றால் ...
நாளை நாமும்.......!