துரோகம்

தோழி என்று ஒருவள் வந்தாள்-வேறு
தோழி கிடைத்ததால் அவளை தனியே தவிக்க விட்டு சென்றாள்...

தோழன் என்று ஒருவன் வந்தான்
காதல் என்று கூறி அவளை காயப்படுத்தி சென்றான்...

காதலன் என்று ஒருவன் வந்தான்
காமம் காட்ட மறுத்ததால் அவளை கடந்து சென்றான்...

கனவன் என்று ஒருவன் வந்தான்
வரதட்சணையில் குறை என்று அவளை தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டான்...

சொந்தம் என்று சிலர் வந்தனர்-மனம்
நொந்து போகும்படி பேசிச்சென்றனர்...

அக்கம் பக்கத்தினர் என்ற பெயரில் சிலர்
பக்கம்பக்கமாய் புரளிகளை கிளப்பி விட்டனர்...

மகன் என்று பிறந்தவனும்
மண்ணிலிருந்து மனைவரை தனக்கென்று அனைத்தையும் எடுத்து சென்றான்

தன்னை காத்தவள்
தன்னலம் மறந்தவள்

காயங்கள் பட்டு பட்டு அவள் பட்டமரம் ஆகிவிடமாட்டாள்

காலங்கள் கடந்தாலும்
தன் உயிர் பிரிந்தாலும் கட்டுமரமாய் மாறி என்றும் உதவுவாள்...

துரோகங்களை தாண்டியும் அவள்
தொடர்ந்து முன்னேறுவாள்...

எழுதியவர் : ஷாகிரா பானு (27-Apr-17, 6:18 pm)
Tanglish : throgam
பார்வை : 4960

மேலே