பிராச்சி

ஏண்டியம்மா பட்டணத்துப் பொண்ணு உம் பேரு என்னடி?
😊😊😊😊😊😊
எம் பேரு ப்ராச்சி பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
என்னடி 'பிராச்சி'-ன்னு உனக்கு பேரு வச்சிருக்காங்க. தமிழ்ல 'புரட்சி' ன்னுதான் சொல்லுவாங்க. உம் பேரு என்னடான்னா பிராச்சி-ன்னு இருக்குது.
😊😊😊😊😊😊😊
பாட்டிம்மா நாந் தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து கல்லூரில படிச்சிட்டிருக்கற இந்திக்காரப் பொண்ணு. தமிழ தமிழர்களைவிட நல்லாப் பேசுவேன். எங்களுக்கெல்லாம் தாய்மொழிப் பற்று இருக்குது. தமிழர்களுக்குத் தான் தாய்மொழிப் பற்று இல்லை. அதனால தான் 99% தமிழர்கள் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வச்சு பெருமை அடையறாங்க. நாங்க எல்லாம் அப்பிடி இல்லை.
😊😊😊😊😊😊😊😊
நீ சொல்லறது சரிதாண்டி பிராச்சி .
😊😊😊😊😊
எங்க தமிழர்கள நெனச்சா எனக்கு வெக்கமா இருக்குடி பிராச்சி. சரிடி பிராச்சி, உம் பேருக்கு என்னடி அர்த்தம்.
😊😊😊😊😊
பாட்டிம்மா, ப்ராச்சி (Prachi) -க்கு ரண்டு அர்த்தம்: காலை (morning), கிழக்கு (East).
😊😊😊😊😊
அடியே பிராச்சி உம் பேருக்கு நல்ல அர்த்தமெல்லாம் இருக்குதே. எங்க தமிழர்கள் தான் அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்களையெல்லாம் புள்ளைங்களுக்கு வச்சிடுவாங்க.
😊😊😊😊😊
உங்க பேத்தி செம்பருத்தியும் நானும் ஒரே வகுப்பில படிக்கிறோம். நான் அவளப் பாக்கத்தான் வந்தேன். அவளக் கூப்புடுங்க.
😊😊😊😊
செம்பருத்தி கடைக்கு போயிருக்கறா. வா, இங்க வந்து உக்காரு. கொஞ்ச நேரத்தில வந்துடுவா.
😊😊😊😊😊
நன்றிங்க பாட்டிம்மா.

எழுதியவர் : மலர் (1-May-17, 1:38 pm)
பார்வை : 135

சிறந்த நகைச்சுவைகள்

மேலே